January - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
24/01/2020 - Friday |
Pournami (பௌர்ணமி) |
10/01/2020 - Friday |
Pradosham (பிரதோஷம்) |
08/01/2020 - Wednesday |
22/01/2020 - Wednesday |
|
Karthigai (கார்த்திகை) |
06/01/2020 - Monday |
Ashtami (அஷ்டமி) |
03/01/2020 - Friday |
18/01/2020 - Saturday |
|
Navami (நவமி) |
04/01/2020 - Saturday |
19/01/2020 - Sunday |
|
Shasti (சஷ்டி) |
31/01/2020 - Friday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
13/01/2020 - Monday |
Thiruvonam (திருவோணம்) |
25/01/2020 - Saturday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
23/01/2020 - Thursday |
Ekadhasi (ஏகாதசி) |
06/01/2020 - Monday |
20/01/2020 - Monday |
|
Chathurthi (சதுர்த்தி) |
28/01/2020 - Tuesday |
February - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
23/02/2020 - Sunday |
Pournami (பௌர்ணமி) |
08/02/2020 - Saturday |
Pradosham (பிரதோஷம்) |
06/02/2020 - Thursday |
21/02/2020 - Friday |
|
Karthigai (கார்த்திகை) |
03/02/2020 - Monday |
Ashtami (அஷ்டமி) |
02/02/2020 - Sunday |
16/02/2020 - Sunday |
|
Navami (நவமி) |
03/02/2020 - Monday |
17/02/2020 - Monday |
|
Shasti (சஷ்டி) |
29/02/2020 - Saturday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
12/02/2020 - Wednesday |
Thiruvonam (திருவோணம்) |
21/02/2020 - Friday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
21/02/2020 - Friday |
Ekadhasi (ஏகாதசி) |
05/02/2020 - Wednesday |
19/02/2020 - Wednesday |
|
Chathurthi (சதுர்த்தி) |
27/02/2020 - Thursday |
March - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
24/03/2020 - Tuesday |
Pournami (பௌர்ணமி) |
09/03/2020 - Monday |
Pradosham (பிரதோஷம்) |
07/03/2020 - Saturday |
21/03/2020 - Saturday |
|
Karthigai (கார்த்திகை) |
01/03/2020 - Sunday |
28/03/2020 - Saturday |
|
Ashtami (அஷ்டமி) |
03/03/2020 - Tuesday |
17/03/2020 - Tuesday |
|
Shasti (சஷ்டி) |
30/03/2020 - Monday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
12/03/2020 - Thursday |
Thiruvonam (திருவோணம்) |
20/03/2020 - Friday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
22/03/2020 - Sunday |
Ekadhasi (ஏகாதசி) |
05/03/2020 - Thursday |
20/03/2020 - Friday |
|
Chathurthi (சதுர்த்தி) |
04/03/2020 - Wednesday |
18/03/2020 - Wednesday |
|
28/03/2020 - Saturday |
April - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
22/04/2020 - Wednesday |
Pournami (பௌர்ணமி) |
07/04/2020 - Tuesday |
Pradosham (பிரதோஷம்) |
05/04/2020 - Sunday |
20/04/2020 - Monday |
|
Karthigai (கார்த்திகை) |
25/04/2020 - Saturday |
Ashtami (அஷ்டமி) |
01/04/2020 - Wednesday |
15/04/2020 - Wednesday |
|
30/04/2020 - Thursday |
|
Navami (நவமி) |
02/04/2020 - Thursday |
16/04/2020 - Thursday |
|
Shasti (சஷ்டி) |
29/04/2020 - Wednesday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
11/04/2020 - Saturday |
Thiruvonam (திருவோணம்) |
16/04/2020 - Thursday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
21/04/2020 - Tuesday |
Ekadhasi (ஏகாதசி) |
04/04/2020 - Saturday |
18/04/2020 - Saturday |
|
Chathurthi (சதுர்த்தி) |
27/04/2020 - Monday |
May - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
22/05/2020 - Friday |
Pournami (பௌர்ணமி) |
07/05/2020 - Thursday |
Pradosham (பிரதோஷம்) |
05/05/2020 - Tuesday |
20/05/2020 - Wednesday |
|
Karthigai (கார்த்திகை) |
22/05/2020 - Friday |
Ashtami (அஷ்டமி) |
15/05/2020 - Friday |
30/05/2020 - Saturday |
|
Navami (நவமி) |
01/05/2020 - Friday |
02/05/2020 - Saturday |
|
16/05/2020 - Saturday |
|
31/05/2020 - Sunday |
|
Shasti (சஷ்டி) |
28/05/2020 - Thursday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
10/05/2020 - Sunday |
Thiruvonam (திருவோணம்) |
13/05/2020 - Wednesday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
20/05/2020 - Wednesday |
Ekadhasi (ஏகாதசி) |
03/05/2020 - Sunday |
18/05/2020 - Monday |
|
Chathurthi (சதுர்த்தி) |
26/05/2020 - Tuesday |
June - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
20/06/2020 - Saturday |
Pournami (பௌர்ணமி) |
05/06/2020 - Friday |
Pradosham (பிரதோஷம்) |
03/06/2020 - Wednesday |
18/06/2020 - Thursday |
|
Karthigai (கார்த்திகை) |
18/06/2020 - Thursday |
Ashtami (அஷ்டமி) |
13/06/2020 - Saturday |
28/06/2020 - Sunday |
|
Navami (நவமி) |
14/06/2020 - Sunday |
29/06/2020 - Monday |
|
Shasti (சஷ்டி) |
26/06/2020 - Friday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
09/06/2020 - Tuesday |
Thiruvonam (திருவோணம்) |
10/06/2020 - Wednesday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
19/06/2020 - Friday |
Ekadhasi (ஏகாதசி) |
02/06/2020 - Tuesday |
17/06/2020 - Wednesday |
|
Chathurthi (சதுர்த்தி) |
24/06/2020 - Wednesday |
July - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
20/07/2020 - Monday |
Pournami (பௌர்ணமி) |
04/07/2020 - Saturday |
Pradosham (பிரதோஷம்) |
02/07/2020 - Thursday |
18/07/2020 - Saturday |
|
Karthigai (கார்த்திகை) |
16/07/2020 - Thursday |
Ashtami (அஷ்டமி) |
13/07/2020 - Monday |
28/07/2020 - Tuesday |
|
Navami (நவமி) |
14/07/2020 - Tuesday |
28/07/2020 - Tuesday |
|
Shasti (சஷ்டி) |
26/07/2020 - Sunday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
08/07/2020 - Wednesday |
Thiruvonam (திருவோணம்) |
07/07/2020 - Tuesday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
19/07/2020 - Sunday |
Ekadhasi (ஏகாதசி) |
01/07/2020 - Wednesday |
16/07/2020 - Thursday |
|
30/07/2020 - Thursday |
|
Chathurthi (சதுர்த்தி) |
24/07/2020 - Friday |
August - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
19/08/2020 - Wednesday |
Pournami (பௌர்ணமி) |
03/08/2020 - Monday |
Pradosham (பிரதோஷம்) |
01/08/2020 - Saturday |
16/08/2020 - Sunday |
|
30/08/2020 - Sunday |
|
Karthigai (கார்த்திகை) |
12/08/2020 - Wednesday |
Ashtami (அஷ்டமி) |
11/08/2020 - Tuesday |
26/08/2020 - Wednesday |
|
Navami (நவமி) |
12/08/2020 - Wednesday |
27/08/2020 - Thursday |
|
Shasti (சஷ்டி) |
24/08/2020 - Monday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
07/08/2020 - Friday |
Thiruvonam (திருவோணம்) |
03/08/2020 - Monday |
30/08/2020 - Sunday |
|
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
17/08/2020 - Monday |
Ekadhasi (ஏகாதசி) |
15/08/2020 - Saturday |
29/08/2020 - Saturday |
|
Chathurthi (சதுர்த்தி) |
22/08/2020 - Saturday |
September - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
17/09/2020 - Thursday |
Pournami (பௌர்ணமி) |
01/09/2020 - Tuesday |
Pradosham (பிரதோஷம்) |
15/09/2020 - Tuesday |
29/09/2020 - Tuesday |
|
Karthigai (கார்த்திகை) |
08/09/2020 - Tuesday |
Ashtami (அஷ்டமி) |
10/09/2020 - Thursday |
24/09/2020 - Thursday |
|
Navami (நவமி) |
11/09/2020 - Friday |
25/09/2020 - Friday |
|
Shasti (சஷ்டி) |
22/09/2020 - Tuesday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
05/09/2020 - Saturday |
Thiruvonam (திருவோணம்) |
27/09/2020 - Sunday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
15/09/2020 - Tuesday |
Ekadhasi (ஏகாதசி) |
13/09/2020 - Sunday |
20/09/2020 - Sunday |
|
27/09/2020 - Sunday |
|
Chathurthi (சதுர்த்தி) |
20/09/2020 - Sunday |
October - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
16/10/2020 - Friday |
Pournami (பௌர்ணமி) |
01/10/2020 - Thursday |
31/10/2020 - Saturday |
|
Pradosham (பிரதோஷம்) |
14/10/2020 - Wednesday |
28/10/2020 - Wednesday |
|
Karthigai (கார்த்திகை) |
05/10/2020 - Monday |
Ashtami (அஷ்டமி) |
10/10/2020 - Saturday |
24/10/2020 - Saturday |
|
Navami (நவமி) |
11/10/2020 - Sunday |
25/10/2020 - Sunday |
|
Shasti (சஷ்டி) |
22/10/2020 - Thursday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
05/10/2020 - Monday |
Thiruvonam (திருவோணம்) |
24/10/2020 - Saturday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
15/10/2020 - Thursday |
Ekadhasi (ஏகாதசி) |
13/10/2020 - Tuesday |
27/10/2020 - Tuesday |
|
Chathurthi (சதுர்த்தி) |
20/10/2020 - Tuesday |
November - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
14/11/2020 - Saturday |
Pournami (பௌர்ணமி) |
29/11/2020 - Sunday |
Pradosham (பிரதோஷம்) |
12/11/2020 - Thursday |
27/11/2020 - Friday |
|
Karthigai (கார்த்திகை) |
02/11/2020 - Monday |
29/11/2020 - Sunday |
|
Ashtami (அஷ்டமி) |
08/11/2020 - Sunday |
22/11/2020 - Sunday |
|
Navami (நவமி) |
09/11/2020 - Monday |
23/11/2020 - Monday |
|
Shasti (சஷ்டி) |
20/11/2020 - Friday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
04/11/2020 - Wednesday |
Thiruvonam (திருவோணம்) |
20/11/2020 - Friday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
13/11/2020 - Friday |
Ekadhasi (ஏகாதசி) |
11/11/2020 - Wednesday |
26/11/2020 - Thursday |
|
Chathurthi (சதுர்த்தி) |
18/11/2020 - Wednesday |
December - 2020 | |
---|---|
Amavasai (அமாவாசை) |
14/12/2020 - Monday |
Pournami (பௌர்ணமி) |
29/12/2020 - Tuesday |
Pradosham (பிரதோஷம்) |
12/12/2020 - Saturday |
27/12/2020 - Sunday |
|
Karthigai (கார்த்திகை) |
26/12/2020 - Saturday |
Ashtami (அஷ்டமி) |
08/12/2020 - Tuesday |
22/12/2020 - Tuesday |
|
Navami (நவமி) |
09/12/2020 - Wednesday |
23/12/2020 - Wednesday |
|
Shasti (சஷ்டி) |
20/12/2020 - Sunday |
Sankatahara Chathurthi (சங்கடஹர சதுர்த்தி) |
03/12/2020 - Thursday |
Thiruvonam (திருவோணம்) |
18/12/2020 - Friday |
Maadha Sivarathiri (மாத சிவராத்திரி) |
13/12/2020 - Sunday |
Ekadhasi (ஏகாதசி) |
11/12/2020 - Friday |
25/12/2020 - Friday |
|
Chathurthi (சதுர்த்தி) |
18/12/2020 - Friday |
பௌர்ணமி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- பெளர்ணமி அன்று அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள அல்லது புனித நதிகளில் நீராடலாம்.
- பெருமாளின் எந்த வடிவத்தையம் வழிபடலாம் ,ராதா மற்றும் கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு.
- பெளர்ணமி நாளில் செய்யும் எல்லா மந்திர ஜெபமும் அளவில்லாத பலனை கொடுக்கும்.
- பெளர்ணமி அன்று விரதம் இருக்க வேண்டும்.
- உங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு பல விதமான உணவு வகைகளை நெய்வைத்தியமாக படைக்கலாம்.
- பெளர்ணமி அன்று அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற கெட்ட தாமச குணங்களை தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
- அன்று மது போன்ற போதை பொருள்களை உட்கொள்ளக் கூடாது..
- அன்று உங்கள் நகங்கள் மற்றும் முடியை வெட்டக் கூடாது.
- பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் வந்தால் அன்று எந்தவிதமான சுப காரியங்களும் செய்யக் கூடாது.
- பெளர்ணமி அன்று சந்திரன் உதயமான பிறகு குளிக்கக் கூடாது.
- அன்று எந்த விதமான சூதாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது.
அமாவாசை அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- அமாவாசை அன்று நம் முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபடலாம். இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அன்று குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். அமாவாசை தினம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. .
- ஜீவசமாதிகளில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மற்ற நாட்களை விட அதிக அளவில் நல்ல அதிர்வை வெளிப்படுத்தும். ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய விரும்புவர்கள் குறிப்பாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் அதிக அளவு வெளிப்படும் அதிர்வை உள்வாங்கும் முகமாக அன்றைய நாள்களில் ஜிவசமாதியான இடத்தில் வழிபாடுகள் செய்வது மிகச்சிறந்தது.
- அன்றைய தினம் எந்த விதமான மிகக் கடினமான வேலைகள் உடல் ரீதியான வேலைகள் எதுவும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யும் போது தவறி காயப்பட்டால் ரத்தக் காயம் ஏற்படும். அடிப்பட்ட வீரியம் அதிகமாக இருக்கும் சீக்கிரம் ஆறாது.
- அமாவாசை அன்று பதட்டமும், கோபமும் ஏற்பட்டால் முடிந்த அளவுக்கு மௌனத்தை பின்பற்றுங்கள் அமாவாசையன்று மௌன விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. உங்களை நீங்களே உணர வைப்பதற்கான நல்ல விரதமாய் மௌன விரதம் இருக்கும்..
- அமாவாசை நாள் உங்களால் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்வது ஐஸ்வர்யத்தை குடுக்கும். தேவையற்ற முடிவுகளை அமாவாசையில் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது..
கார்த்திகை அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- கார்த்திகை அன்று அதி காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும்.
- கார்த்திகை அன்று சிவபெருமானுக்கும் முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அந்த நாளில் மாலை வரை மனதிற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
- கோவில்களில் ஏற்றப்படும் தீபத்திற்கு அளப்பரிய மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் தெரியாமல் அறியாமல் செய்த பாவங்கள் கூட திருக்கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும்.
- அதனால், கார்த்திகை நாள்களில் கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம்,மற்றும் கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றலாம்.
பிரதோஷம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- பிரதோஷம் அன்று காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.நாள் முழுவதும் உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.
- அன்று மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
- பிரதோஷம் அன்று இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.
- நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவற்றை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று நம்பப்படுகிறது .
அஷ்டமி நவமியில் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என நம் முன்னோர்கள் கூறுவார்கள். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதன் காரணத்தாலே அப்படிக் கூறியுள்ளார்கள்.
- அஷ்டமி,நவமி திதிகளில் எந்தவொரு சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) செய்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக செயல்களுக்கும் (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- அஷ்டமி,நவமி நாள்களில் செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்.
- அஷ்டமி திதி மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த நாள்களில் ராகு காலம் போன்ற நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும் பறந்து போய் விடும் என்பது நம் முன்னோர்கள் கூற்று.
சஷ்டி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- சஷ்டி அன்று வீட்டில் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
- முருகனுக்கு உகந்த விரதங்கள் என்று முக்கியமான மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகும். இதில், வார விரதமென்பது செவ்வாய் கிழமைகளில் கடைபிடிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் கடைபிடிப்பதுமற்றும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் கடைபிடிப்பது.
- ஒருவருக்கு திருமணம் இல்லாமல் அவரின் வாழ்க்கை முழுமையடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வது தவறு. சஷ்டி விரதம் நாட்களில் யாராக இருந்தாலும் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொண்டு அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
- சஷ்டி நாளில் புதிய வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும்.
- சஷ்டி நாளில் வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
- திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களை நடத்துதல். கல்வி, கலை போன்ற துறைகளில் புதிய முயற்சிகளை தொடங்குதல் ஆகியவை சஷ்டி நாளில் செய்யலாம்.
- சஷ்டி திதியில் அசைவ உணவு சாப்பிடாமல் சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும்.
சதுர்த்தி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- விநாயகர் என்றாலே துன்பங்கள், தடைகள் ஆகியவற்றை போக்கி இன்பங்களை தரும் தெய்வம். அவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த திதி சதுர்த்தி.
- சதுர்த்தி நாள்களில் விநாயகரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கி, கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- சதுர்த்தி அன்று காலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்தை எடுத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
- சதுர்த்தி நாளில் மட்டும் கொழுக்கட்டை, சுண்டல் படைத்தால் போதும். அடுத்த நாள் நைவேத்தியம் எதுவும் படைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
- சதுர்த்தி தினமான இன்று விநாயகர் கோவிலுக்கு சென்று ஆலயத்தை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்
திருவோணம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- திருவோணம் விரதம் இருக்க நினைப்பவர்கள் அதற்க்கு முதல் நாள் இரவே சைவமாக சாப்பிட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும்..
- திருவோண நட்சத்திரம் வரும் நாள்களில் அதிகாலையில் எழுந்து நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம்,நாராயண மந்திரத்தையோ அல்லது வாமன மூர்த்திக்கு உரிய மந்திரத்தையோ கூறி வழிபட வேண்டும்..
- திருவோண நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும். பகலில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம். அல்லது உப்பு இல்லாமல் உணவு சாப்பிடலாம். அல்லது முடியும் என்கிறவர்கள் முழு நேரமும் உபவாசமாக இருக்கலாம்.
- திருவோண நாளில் மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை நினைத்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்!
சிவராத்திரி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து நான்கு ஜாமங்களிலும் sசிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, இறைவனின் அருளைப் பெறக்கூடிய மிக அற்புதமான திருநாள்.
- சிவ புராணம், கோளாறு பதிகம் படித்தல், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் போன்ற புத்தகங்ளை படிக்கலாம். அதோடு நடராஜர் பத்து, பரமசிவ ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம்.
- சிவராத்திரி அல்லாமல் மற்ற நாட்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தால் கிடைக்கும் பலனை காட்டிலும், சிவ ராத்திரி அன்று உச்சரிக்க நூறு மடங்கு அதிகமாக அருள் கிடைக்கும்.
- சிவ ராத்திரி அன்று மாலை 6 மணிக்குள் குளித்து சிவாலயத்திற்குச் செல்லுங்கள். பணிக்கு செல்பவர்கள் பணி முடித்து திரும்பியதும் குளித்து கோயிலுக்கு சென்று, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிவ சிந்தனையில் தியானம் செய்தாலே போதுமானது.
ஏகாதசி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- ஏகாதசி நாள்களில் அதிகாலையில் எழுந்து குளித்து செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, விஷ்ணுவை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
- ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய மறைவுக்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்
- ஏகாதசி அன்று சினிமா பார்ப்பதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ கூடாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
- முறைப்படி இருக்கும் ஏகாதசி நாளில் ஒருவரை பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும் நற்கதி அடையச் செய்யும்.
- ஏகாதசி நாளில் பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்
- ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டு
சந்திர தரிசனம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- சந்திர தரிசனம் என்பது அமாவசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள், சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்
- செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை(சந்திர தரிசனம்) மிகவும் விசேஷமான ஒன்றாகும். சனிக்கிழமையான இன்றைய தினம் சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
- அன்று சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது
- சந்திர தரிசனம் அன்று தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும். திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.
கரிநாள் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
- கரிநாளில் சூரியனின் வெப்பமானது அதிகமாக இருக்கும். கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நாம் அதிகமாக அன்றைய தினம் வெயிலில் சென்றால் நம் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும். உறுப்புக்கள் பாதிப்பும், வேலை செய்யும் அதன் தன்மை மாறுபடுவதோடு, மன நிலையும் பாதிக்கப்படும்.
- இதன் காரணமாக கரி நாட்களில் நாம் சாதாரண தினங்களில் வெயிலில் சென்று வேலை செய்து வருவது போல், அதிகமாக வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என அறிவியல் ரீதியாகவும் குறிப்பிடப்படுகின்றது.
- ஆகவே இந்தக் கரிநாட்களில் திருமணம், கிருஹப்ரவேசம், சீமந்தம் நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆனால் பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம், சிறப்புண்டு.