சஷ்டி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

  • சஷ்டி அன்று வீட்டில் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
  • முருகனுக்கு உகந்த விரதங்கள் என்று முக்கியமான மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகும். இதில், வார விரதமென்பது செவ்வாய் கிழமைகளில் கடைபிடிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் கடைபிடிப்பதுமற்றும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் கடைபிடிப்பது.
  • ஒருவருக்கு திருமணம் இல்லாமல் அவரின் வாழ்க்கை முழுமையடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வது தவறு. சஷ்டி விரதம் நாட்களில் யாராக இருந்தாலும் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொண்டு அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
  • சஷ்டி நாளில் புதிய வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும்.
  • சஷ்டி நாளில் வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
  • திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களை நடத்துதல். கல்வி, கலை போன்ற துறைகளில் புதிய முயற்சிகளை தொடங்குதல் ஆகியவை சஷ்டி நாளில் செய்யலாம்.
  • சஷ்டி திதியில் அசைவ உணவு சாப்பிடாமல் சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும்.